தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
இம்முறை இப் பொதுத் தேர்தலில் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ்ஆகக் கூடியது நான்கு ஆசனம்களை மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளது . இங்கு தான் நாம் உன்னிப்பாக தூர நோக்கில் சிந்திக்க வேண்டும். நான்கு ஆசனம்களைப் பெறு மிடத்து சகல அங்கத்தவர்களும் பின் ஆசனத்தில் தான் அமரவேண்டிய நிலைமை ஏற்படும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அமைச்சுப் பதவி கிடைப்பதும் சந்தகமே .
இவ்வாறன நிலைமை ஓன்று ஏற்படின் , இந் நிலைமைக்கு நீங்களே முழு முதல் காரணம் எனக் கூறி குற்றமும் பழியும் சாட்டப் படும், உங்களால் தான் எங்களுக்குப் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெற முடியாமல் போய்விட்டது அதனால் உங்களுக்கு எதுவிதமான அபிவிருத்தி தேவைகளைப் பெற முடியாதுள்ளது என்ற சாக்குப் போக்குச் சொல்லப் படும் , மீண்டும் ஐந்து வருடம்கள் நாம் தவம் இருக்க வேண்டி ஏற்படும் . இது நமக்குத் தேவையா எனச் சிந்தியுங்கள் .
.பேரம் பேரம் என்ற பாவ பழிக் கோசத்துக்கு இம்முறை சாவு மணி அடிக்கப் படும் .மற்றும் மாற்று இனவாதிகளுக்கு இந்த பேரம் என்ற கோசம் நம்மை ஒரு இனவாதம் புடித்தவர்கள் என்ற கருத்தையும் கொண்டு வரும் . ஆகையால் அம்பாறை மாவட்ட மக்களே அகில இலங்கை ரீதியாக நடக்கக் கூடிய எதிர் கூலம் மற்றும் அனுகூலம்களைப் பற்றிச் சிந்தியுங்கள் , இம் முறையும் உங்களது மூளையை அடகு வைக்க வேண்டாம் என தாழ்மையுடனும் மற்றும் முன் எசரிக்கை யுடனும் கேட்டுக் கொள்கிறேன்

