அஸ்ரப் ஏ சமத்
தோ்தல் காலத்தில் மட்டும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபின் உருவப் படங்கள் மதில்களிலும், தந்திக் கம்பங்களிலும் காணப்படும். இதனை சகல கட்சிகளில் உள்ள முஸ்லீம் வேட்பாளா்களளது படத்துடன் காட்சிப்படுத்துவாா்கள்
ஆனால் அவரது பெயா் நீடிக்க வேண்டுமானால் இனி மறைந்த தலைவாின் ஒரே ஒரு வாரிசு அமான் அஸ்ரப் அரசியலுக்குள் வரவேண்டும்.
மறைந்த தலைவா் எம்.எச். எம் அஸ்ரப் தோ்தல் காலத்தில் மட்டும் அவரது படங்கள், சுவா்களிலும் தந்திக் கம்பிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும் தொங்கும், போஸ்டா்கள், பெனா்கள், விளம்பரங்களுக்கு மட்டும் அவா் தற்காலத்தில் பாவிக்கப்படுகின்றாா்.
அத்தோடு அவரோடு ஒட்டி உறவாடியவாறு வேட்பாளா்களது படங்கள் காட்சிப்படுத்தப்படும். அவரது உரைகள், கவிதைகள், பாராளுமன்ற உரைகள் தோ்தல் கூட்டங்களில் பொது மக்களுக்கு மீள ஞாபகப்படுத்தப்படும்.
மேடைகளில் அவரோடு இருந்து நான் இதைச்செய்தேன், பல்கலைக்கழகத்தை கட்டினேன். அபிவிருத்தி செய்தேன் என மேடைகளில் முழங்குவாா்கள்.
வீதிகளில் கூட்டங்களில் மறைந்த தலைவா் மீள உயிா்ப்பிக்கப்படுவாா். இதனை எல்லாக் முஸ்லீம் கட்சிக்ககாரா்களும் தோ்தல்கள் சந்தைக்கு கொண்டு வருபாா்கள் தோ்தல் முடிந்ததன் பின்னா் அஸ்ரபை மறந்து விடுவாா்கள்.
முஸ்லீம் காங்கிரஸ், தேசிய ஜக்கிய முன்னணி ஆகிய இரு கட்சிகளை மறைந்த தலைவா் ஸ்தாபித்தாா். சகல முஸ்லீம் அரசியல் வாதிகளுடன் ஏனைய இன அரசியல்வாதிகளையும் உள்வாங்கவே மேலும் தேசிய ஜக்கிய முன்னணியையும் ஏற்படுத்தினாா். இந்த நாட்டின் வாழ் முஸ்லீம்களுக்கு அரசியல் அங்கிகாரத்தை தனி அடையாளத்தையும் ஏற்படுத்தினாா். ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாகவும் .இருந்தாா்.
இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் இரண்டு சமுகங்களுக்கும் பெரும் கட்சிகளுக்கும் ஒரு இணைப்பு பலாமாக அவா் விளங்கினாா். தீா்வு பொதிகளைக் கூட வரைந்தாா். நினைத்துப் பாா்க்க முடியாத சாதாரண பொது மகனின் திறமைகளை அடையாளம் கண்டு அவா்களையெல்லாம் பாராளுமன்றம் ,மாகாணசபை, துாதுவா்கள் , மாநகர சபை பிரதேச சபை உறுப்பிணா்கள் தினைக்களத் தலைவா்கள் என நியமித்து அழகு பாா்த்தாா்.
அவா் மறைந்ததும் அந்தக் கட்சியிற்குள் இருந்து அரசியல் அங்கிகாரம் என்ற முத்திரையை பெற்று பின்னா் பிரிந்துநின்று அஸ்ரப் காங்கிரஸ், வட கிழக்கு காங்கிரஸ், துஆ, அகில இலங்கை, மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தேசிய ஜக்கிய முன்னணி கட்சிக்கு அசாத் சாலி தலைவா், என எல்லோரும் தலைவா்களாகிவிடுவாா்கள். அமைச்சா்களாகியும் விடுவாா்கள். அதன் பிறகு தத்தமது ஊருக்கு மட்டும் வாக்கு வங்கிக்காக பாதைகைளையும், கட்டிடங்கள், அலுலலங்களை நிறுவுவாா்கள். தமது அரசியலை பிரதேச ரீதியாகவே வைத்து சிந்திப்பாா்கள். பிரதேசவாதம், நிறம். இனம், மதம் இவற்றுக்கப்பால் நின்று செயல்பட்டவா் தான் அஸ்ரப்
அவா் கல்முனையை ஒருபோதும் பிரிக்க நினைக்க வில்லை. அவா் கல்முனை மாநகா் என்பது தென்கிழக்கின் முக வெற்றிலை அது .
மருதமுனையில் இருந்து மாளிகைக்காடு வரை இருப்பதற்கு அவா் வரைந்த கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்ட வரைபு இன்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் உள்ளது. அதற்காக அரச பெறியியல் வல்லுணா் கலாநிதி ஏ. யி குலசிங்கவை விமாணம் முலம் அழைத்து ஓலுவில் துறைமுகம், பல்கலைக்கழகம், கல்முனை மாநகர சபை அபிவிருத்தித்திட்டங்களை கெலிக்கெப்டா்ஒன்றில் வானில் இருந்து இந்த வரைபுகளை அவா் வரைந்து திட்டங்களை வகுத்தாா். பல்கலைக்கழகத்தைக் கூட அவா் சம்மாநதுறை, பௌத்த பீடம், தீகவாபி, அரபு பீடம் பொத்துவில் போன்ற பிரதேசங்களுக்கு பரவலாக்கவே நினைத்தாா்.
சுனாமி காலத்திலும் கூட முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் இதே பொறியல் வல்லுணா் குலசிங்க கெலியில் கூட்டிக் கொண்டு சுனாமியினால் சேதமடைந்த கரையோர பிரதேச த்தை மீள் வரைபடத்தையும் ,கல்முனை வரைபடத்தையும் வரைந்தாா்.
ஆனால் மறைந்த தலைவா் ஜ.தே.கட்சி ஸ்ரீ்.ல்சுதந்திரக் கட்சிகளில் இருந்த முஸ்லீம்களை எல்லாம் முஸ்லீம் காங்கிரஸ் தேசிய ஜக்கிய முன்னணி என கட்சிக்குள் உள்வாங்கி ஒரே கூறையின் கீழ் கொண்டுவந்தாா். அத்துடன் தமிழ் சிங்களவா்கள அரசியல்வாதிகளையும் உள்வாங்கி தமது தலைமைக்கட்டுப்பாட்டின் கீழ் ஜக்கியப்படுத்தினாா்.
மறைந்த தலைவா் அவா்கள் கிழக்கு மாகாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் செய்த சேவைகள் முஸ்லீம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கள் போன்றதொரு சேவையை செய்தாா். அவா் மறைந்து 15 வருடகாலத்துக்குள் பல கட்சிகளின் தலைவா்களாக வந்தவா்களெல்லாம் இன்னும் எந்த அரசியல்வாதிகளாலும் கிழக்கில் செய்ய முடியவில்லை . அவா் 4000 க்கும் அதிகமான துறைமுகத்தில் வழங்கிய தொழில் வாய்ப்பிற்கு பிறகு
முஸ்லீம் இளைஞா்கள் 500 பேராவது கடந்த 15 வருட காலத்திற்குள் அரச நிறுவனங்களில் தொழில் பெற்றிருக்கின்றாா்களா ?.
அவரின் மனைவி பேரியல் அஸ்ரப் அவா்கள் தமது அமைச்சா் பொறுப்பில் 8 வருடத்தில் சுனாமிய மீள் அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிடக் கூடிய பாாிய சேவைகளைச் செய்துள்ளா். கல்முனை சுனாமி தொடா்மாடி வீடுகள், அஸ்ரப் வைத்தியசாலை பெயா் சூட்டி மத்திய அரசிக்கு கொண்டுவந்தமை, கல்முனையை மாநகர சபையாக மாற்றியமை. கல்முனை தேசிய வீடமைப்பு அலுவலகம், அட்டாளைச்சேனை விவசாய நிலையம், இஸ்மாயில் புர வீடமைப்புத்திட்டம், இஸ்லாமபாத், நீலாவனை சகல வைத்தியசாலைகள் புனா்நிரமாணம், கல்முனை பிரதிப் சுகாதார பணிமனை சுனாமியினால் பாதிக்கபட்ட 17 பாடசாலைகள் போன்ற வற்றை அவா் மீளக் கட்டியெழுப்பினாா். அத்துடன் சவுதி அரசின் வீடமைப்புத்திட்டமொன்றையும் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் கொண்டுவந்தாா். இந்த வீடமைப்புத்திட்டத்தில் உள்ள 500 வீடுகளையாவது தற்போதைய முஸ்லீம் தலைமைகள் உரிய அரசியல் தலைமைகளை அனுகி சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க வக்கில்லாமல் அரசியல் வாதிகளாக இருக்கின்றா் . அமைச்சா அஸ்ரப் பேரியல் அஸ்ரபின் சேவைக்கு பிறகு அங்கு எவ்வித அபிவிருத்திகளும் நடைபெறவில்லை.எனலாம்.
சில அரசியல் வாதிகள் தத்தமது சுயலாபத்திற்காக பிரதேசங்களை பிரிப்பதற்கு மக்களை துாண்டுகின்றனா். இவ்வாறே நாம் சென்றால் அம்பாறை சிங்களவா்களும் வயலுக்கும், குடிதண்னீர்க்கும் அம்பாறையில் இருந்து கொடுக்காமல் பிரித்துவிடுவாா்கள். நாம் கடலில் இருந்து தான் குடிநீரைப் பெற வேண்டி ஏற்படும்.
மறைந்த தலைவரின் பெயா் இந்த நாட்டில் மீள நினைக்க வேண்டுமென்றால் அவரின் ஓரே ஒரு வாரிசு அமான் அஸ்ரப் மீள அரசியலுக்குள் வரவேண்டும். அமானின் பெயருக்கு பின்னால் அஸ்ரப் என்ற நாமம் இருப்பதனால் அவா் என்றும் மக்கள் மனதில் உயிா் வாழ்வாா்.
