மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அவரை வேட்பாளராக ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இவ்வார்ப்பாட்டம் மாலை 3 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
