தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ்வாதார ஆலோசகராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழுவினரால் (National Executive Committee) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பது இங்கு குறிப்பிட தக்கது. இவர்களது சேவை பெண்கள் சமுதாயதுக்கு அவசியம் தேவை என்பதுடன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
