Sunday, 5 July 2015

சிரியாவில் ஐஎஸ் நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல்கள்'

'இதுவரை நடந்த தாக்குதல்களிலேயே மிகப்பெரிய வான் தாக்குதல்'
சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வலுவாக நிலைகொண்டுள்ள ராக்கா நகரிலுள்ள நிலைகள் மீது கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கூறுகின்றனர்.
இம்முறை 16 ஐஎஸ்-இலக்குகள் மீது தாங்கள் நடத்திய வான் தாக்குதல்களே சிரியாவில் இதுவரை மேற்கொண்டுள்ள மிகப்பெரிய தாக்குதல்கள் என்று அமெரிக்காவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சிரியாவிலும் இராக்கிலும் தாக்குதல் படைகளை அனுப்புவதற்கு ஐஎஸ் ஆயுததாரிகள் ரக்கா நகரை முக்கிய தளமாக பயன்படுத்துவதை நிறுத்துவதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடந்ததாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் ரக்காவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒரு குழந்தை அடங்கலாக ஐந்து பொதுமக்களும் ஒரு ஐஎஸ் ஆயுததாரியும் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் மனித உரிமை விவகாரங்களை கண்காணித்துவருகின்ற குழுவினர் கூறுகின்றனர்.
Loading...