Sunday, 5 July 2015

சர்வதேச கால்பந்து விளையாட்டில் 'மிகப்பெரிய வெற்றி'; ஃபிஜி சாதனை

பப்புவா நியுகினியில் பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன
சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோனீசிய (சமஷ்டி அரசுகள்)அணிக்கு எதிராக 38-0 என்ற வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதில் ஃபிஜி அணி வீரர் அட்டோனியோ துய்வுனா தனியாக 10 கோல்களை அடித்துள்ளார்.
2001-ம் ஆண்டில், அமெரிக்க சமோவா அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா 31-0 என்ற வெற்றியை பெற்று படைத்திருந்த உலக சாதனையே இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது
Loading...