Friday, 24 July 2015

பிரபாகரனை பப்பாவில் ஏற்றி கொலை செய்தது யாழ்ப்பாண ஊடகங்களே-- ஆனந்த சங்கரியார்


புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக நான் 2010ம் ஆண்டளவில் ஏ9 வீதியால் வந்த போது ஆனையிறவுப் பகுதியில் எரிந்த நிலையில் இருந்த கவசங்கள் பொருத்திய புல்டோசர் ஒன்றைக் கண்டேன்.

அதனை இறங்கிப் பார்வையிட்ட போது அந்தப் பகுதியில் நின்ற படையினர் இதுதான் 1991ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு தாக்குதல் நடாத்தப்பட்ட போது புலிகள் இதனைக் கொண்டு எம்மைத் தாக்கினர். அப்போது இதனை எம்மால் தாக்கி அழிக்க முடியவில்லை.

உடனே ஒரு படைவீரர் தனது உயிரையும் துச்சமென மதித்து புல்டோசரின் மீது ஏறி அதனைச் செலுத்தி வந்தவர்களை கிறனைட் எறிந்து கொலை செய்து தானும் இறந்தார்” எனக் கூறினர். அதன் பின்னர் அந்த புல்டோசர் பகுதியில் தற்போது அந்தப் படைச் சிப்பாயின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதே சம்பவத்தை 1992ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் உதயன் பத்திரிகை, ஆனையிறவில் இராணுவத்தின் டாங்கிக்குள் புலி வீரர் ஏறி கிறனைட் போட்டு தானும் வீரமரணம் அடைந்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தப் பேப்பரை நான் ஒரு கிழமையின் பின்னரே பார்க்க நேர்ந்தது. அதுவும் கொழும்புக்கு வந்த ஒருவர் கொண்டு வந்த போதே பார்த்தேன்.அந்தச் செய்தியைப் பார்த்த நானே புலிகளின் வீரத்தை எண்ணி மெச்சினேன். ஆனால் கதை வேறு என்று பின்னர்தான் தெரிந்தது. 

யாழ்ப்பாணத்தில் அந்நேரம் தொடங்கி 2009ம் ஆண்டு வரை வெளிவந்த உதயன் பத்திரிகையால்தான் முள்ளிவாய்க்கால் வரை அழிவு ஏற்பட்டது. இப்போதும் முன்னாள் போராளிகளை திருப்பி உசுப்பேற்றி கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கும் வித்தியாதரன் விசரனால்தான் இந்த நிலை ஏற்பட்டது. 

பிரபாகரனையும் புலிகளையும் பப்பாவில் ஏற்றி பள்ளத்தில் விழ வைத்து படுகொலை செய்ததற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த பேப்பர்களே காரணம்.

2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக இவன் உதயனில் செய்தி வெளியிட்டு தனது மச்சானையும் கூட்டமைப்புக்குள் இழுத்து பாராளுமன்றம் கொண்டு போன கதை எல்லோருக்கும் தெரியும்.

இப்போது, சரவணபவனை ஏன் இவ்வாறு உயர்த்தி வைத்தேன் என்று அழுவதும் எனக்குத் தெரியும். 2010ம் ஆண்டு 25 வீத வாக்குகளே யாழ்ப்பாணத்தில் பதியப்பட்டன. சனம் அந் நேரத்தில் வாக்குப் போடுவதற்கே மனம் இல்லாது இருந்தது.

வயதானவர்களே தேர்தலில் வாக்களித்தனர். அந்த நேரம் எடுக்கப்பட்ட ஆசனங்களை வைத்து கூட்டமைப்பு கனவு காண்கின்றது, மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு சனம் வாக்குப் போட்டதற்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் போட்டதற்கும் ஒரே ஒரு காரணம் மகிந்த செய்த அநியாயங்களை மனத்தில் வைத்து பழிதீர்த்ததே ஆகும். 

ஆனால் இப்போது மகிந்த இல்லை. ஆகவே சனம் இனி கூட்டமைப்புக்கு வாக்குப் போடுமா? என்பது சந்தேகம். இவ்வாறு ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கொழும்பு சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் ஆனந்தசங்கரியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்


Loading...