Wednesday, 8 July 2015

ஐந்து சுறாக்களின் பசிக்கு ஒரு திமிங்கலம் (வீடியோ)

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடலில் நீந்தும் சாகசக்காரரான பிரட் வெர்கோவும் அவரது மனைவியும் படகில் சென்று கொண்டிருந்த போது கோஃப்ஸ் துறைமுகப்பகுதியில் ஒரு திமிங்கலம் இறந்து மிதப்பதையும், அதனை ஐந்து பசி மிகுந்த சுறாக்கள் அடித்து உண்பதையும் வீடியோ பதிவாக்கியுள்ளனர்.
இந்த ஐந்து சுறாக்களில் மூன்று வொயிட் பாயிண்டர்ஸ் வகையை சேர்ந்தது என்றும், இரண்டு டைகர் சுறாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சுறாக்கள் கூறான பற்களால் திமிங்கலத்தை பிய்த்து தின்றுள்ளன.
இது நியூசவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் நடக்கும் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதனை படமெடுத்து வெளியிட்டுள்ள பிரட் வெர்கோவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவை காண:

Loading...