Wednesday, 8 July 2015

பெரும் வேதனைக் குரிய விடயம்



எப்போதுமே சிறந்த தலைவர்கள் தனது குழுவுக்கு வெற்றியை தேடி தருபவர்களாக இருப்பார்கள். தலைவர்களை உருவாக்குபவர்கள் வெற்றியை இன்று உருவாக்குவது மட்டுமின்றி, சிறந்த தலைவரை உருவாக்கி நாளைய வெற்றியையும் உறுதி செய்பவராக இருப்பார். அதனால் தலைவராக ஆக வேண்டும் என்பவர்கள், தலைவர்களை உருவாக்கும் பண்பையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி அவர்கள் பெயரின் அழியாத விஷயமாகிவிடும்.

ஆனால் தற்போதய அரசியல்வாதிகளிடம் இக் கலாச்சாரப் போக்கு காணப் படுவது வெகு அரிது.தலைவனாகும் அறி குறி தென்பட்டால் அவனை அவ்விடத்திலையே வெட்டிச் சாய்க்கும் தலைவர்கள் தான் நம் மத்தியில் தற்போது  உள்ளனர் இது ஒரு பெரும் வேதனைக் குரிய விடய மாகும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா  கூறினார் 
Loading...