Tuesday, 21 July 2015

முன்னாள் போராளிகள் துரோகிகள்! - சரா புவனேஸ்வரன்












தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக களமிறங்கியிருக்கும் அனைத்து கட்சிகளையும் நிராகரியுங்கள். அவர்கள் எங்களின் வாக்கை சிதறடிக்க வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் துரோகிகள். இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் திருகோணமலையில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செயலாளராவார் சரா புவனேஸ்வரன்.

நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் திருகோணமலை தொகுதி ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகின்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அங்கு பேசிய சரா புவனேஸ்வரன் திருகோணமலையில் வாழும் தங்களை போன்ற பலர் சம்பந்தனின் கருவிலிருந்து வந்ததாக தெரிவித்த போது, சபையில் இருந்தவர்கள் இவர் என்ன சொல்கிறார் என்று விளங்காமல் குழப்பமுற்றுள்ளனர். மொத்தத்தில் கூட்டமைப்பு இம்முறை மூதூர் தொகுதிக்காக இறக்கியிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் சம்பந்தனை புகழ்வது போன்று புகழ்ந்து கொண்டு சம்பந்தனுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...