Tuesday, 21 July 2015

மஹிந்தவின் குடியுரிமை அல்ல;பறிக்கப்பட வேண்டியது JVP அநுரவின் குடியுரிமையே !













இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில், மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என சொல்வதற்கு அநுர திஸாநாயகாவுக்கு தகுதியும் கிடையாது.மேலும் அவர் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த அநீதிகளுக்காக அநுர திஸாநாயகாவின் குடியுரிமையே பறிக்கப்பட வேண்டும்


மஹிந்த நாட்டுக்கு நன்மைகளே செய்துள்ளார். அத்தோடு குடியுரிமை பறிக்கப்படுவதென்பது விளையாட்டல்ல. அதற்காக விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவை விசாரித்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். 



அதன் பின்னர் அது பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே குடியுரிமை பறிக்கப்படுவது தொடர்பாக முடிவெடுக்க முடியும். எனவே இது அரசியல் விளையாட்டல்ல என்பதை அநுர திஸாநாயக புரிந்துகொள்ள வேண்டுமென்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்
Loading...