Saturday, 4 July 2015

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?

mahinda-afp (1)
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், குருநாகல மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிடவுள்ளதாகவும், தாம் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று தெரிவித்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச பெலியத்தெ தொகுதியில் இருந்தே முதலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். பின்னர் அவர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்  போட்டியிட்டு வந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என்று நேற்று சுசில் பிரேம் ஜெயந்த அறிவித்திருந்த போதிலும், அவர் எங்கு போட்டியிடுவார் என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா என்பது தொடர்பாக இன்னமும் அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களும், நிச்சயமற்ற நிலையும் நீடித்து வருகிறது.
Loading...