Wednesday, 15 July 2015

இரான் அணு திட்டம் குறித்த உடன்பாடு சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும்’

மாதக்கணக்கில் நீடித்த இரான் அணு செயற்திட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கிறது
மாதக்கணக்கில் நீடித்த இரான் அணு செயற்திட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கிறது
பல மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரான் அணுத்திட்டம் குறித்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு ஒன்று இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியன்னாவில் இரான் மற்றும் ஆறு உலக வல்லரசு நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்களும்நேற்று திங்கட்கிழமை இரவு பலமணி நேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். இரு தரப்பிலிருந்தும் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக பெயர் குறிப்பிடப்படாத இருதரப்பு இராஜாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்ற பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பு இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தம் என்ன என்பது குறித்த முழு விவரங்களும் இன்னமும் வெளியாகவில்லை. ஆனாலும், இரானின் அணுச் செயற்பாடுகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த நாடு ஏற்றுச் செயற்படுத்துகிறதா என்பதை ஐநா மன்றம் ஊடுறுவி சோதனை செய்யலாம் என்கிற நிபந்தனையை இரான் ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது என்று பிபிசியின் ராஜாங்க செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.
இரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகளை தளர்த்துவதற்கான கால அட்டவணையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...