Monday, 6 July 2015

நான் களமிறங்குவதற்கு பிரதான விதை விதைத்தவர் சந்திரிக்கா குமாரதுங்கவாகும்-- ஜனாதிபதி











சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சியின் போது தீர்மானங்கள் எடுக்கும் போது அனைவரினதும் ஆலோசனைகளுக்கும் செவிமடுத்து தீர்மானங்களை எடுப்பார்.நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக நான் களமிறங்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

எனினும் சந்திரிக்கா அம்மையார் எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபோது நான் வேட்பாளராக போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ ஆதரவு நல்கும் என்று கூட நான் நினைக்கவில்லை. எனினும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு நான் ஜனாதிபதி பீடமேறினேன்.

பொதுவேட்பாளராக நான் களமிறங்குவதற்கு பிரதான விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்
Loading...