Monday, 6 July 2015

ஜனாதிபதியுடனான தொடர்பை துண்டித்தார் மாதுளவாவே சோபித தேரர்












முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததையடுத்து அவருடனான தொடர்புகளை மாதுளவாவே சோபித தேரர் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அறிவித்து அனுமதி வழங்குவதற்கு முன்னர் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார்.எனினும் தேரர் கேட்டிருந்த நாளில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

மாறாக மகிந்தவிற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.அத்துடன் தேரரை எதிர்வரும் நாள்களில் சந்திக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இருப்பினும் தனது கருத்தினை உதாசீனம் செய்துவிட்டார் என்ற சீற்றத்தில் இனிமேல் பேச எதுவும் இல்லை ஏற்கனவே நீங்கள் உங்கள் விருப்பத்தில் செயற்பட்டு விட்டீர்கள் என மாதுளவாவே சோபித தேரர் தெரிவித்துவிட்டார்.

அதன்போது பதிலளித்த ஜனாதிபதி இது என்னுடைய தீர்மானம் அல்ல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தீர்மானம் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு எனில் உடனடியாக பகிரங்க அறிக்கையினை விடுமாறும் மைத்திரியிடம் தேரர் கேட்டுள்ளார்.

எனினும் அறிவிப்பு இதுவரை விடுக்கப்படவில்லை. இதனால் சந்திப்பும் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Loading...