இந்தியாவும் வங்கதேசமும் தம்மிடையிலான எல்லையில், நூற்று அறுபதுக்கும் அதிகமான சிறு நிலப்பரப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவோடு உலகின் மிகவும் சிக்கலான எல்லைத் தகராறு ஒன்று முடிவுக்கு வருகிறது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு சொந்தமான சிறு இடங்கள் பலவும் அதேபோல இந்தியாவில் வங்கதேசத்துக்கு சொந்தமான சிறு இடங்கள் பலவும் உள்ளன.
பதினெட்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் வழியாக உருவாக்கப்பட்ட அலகுகள் இவை.
இந்த இடங்களில் வாழ்ந்துவந்த கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் யதார்த்தத்தில் நாடற்றவர்களாகவே இருதரப்பாலும் நடத்தப்பட்டு வந்துள்ளனர்.
இந்த சிறு பகுதிகள் தற்போது அது அமைந்துள்ள நாட்டுடனேயே சேர்க்கப்படுகிறது.
அதில் வாழும் மக்கள் எந்த நாட்டின் பிரஜாவுரிமை தமக்கு வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தாங்கள் வாழும் இடம் எந்த நாட்டோடு சேருகிறதோ அந்த நாட்டின் பிரஜாவுரிமையை அந்த மக்களில் பெரும்பான்மையானோர் தெரிவுசெய்வார்கள் என்பதால் பலர் குடியுரிமையை மாற்ற வேண்டி வரும் எனத் தெரிகிறது.
ஆனால் வங்கதேசப் பக்கத்தில் வாழும் இந்தியர்கள் சுமார் ஆயிரம் பேர் தமது இந்தியக் குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் அவர்கள் இந்தியப் பக்கத்தில் வந்து குடியேறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
