பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய 08 உறுப்பினர்களுக்கு வேட்புரிமை இழக்க நேரிடம் என தகவல் வெளியாகியுள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலுக்கமைய, இவர்களில் துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, லக்ஷ்மன் வசந்த பெரேரா, சஜின் வாஸ் குணவர்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, சரன குணவர்தன, மஹிந்தாநனதகே அலுத் கமகே ஆகியோர் உள்ளடங்குவார்கள்.
இவர்களில் பலர் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, சிலர் வன்முறைகளில் ஈடுபடல் மற்றும் போதை பொருள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
அவர்களுக்கு வேட்புரிமை வழங்குவதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அவர்களுக்கு தொகுதி அமைப்பாளர்கள் பதவி மாத்திரமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரியிடம் தமக்கு வேட்புமனு கிடைக்காமல் போகலாமென்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பதால்த்தான் இவர்கள் மகிந்தவின் காலடியில் கதியாக கிடக்கிறார்கள்.
இவர்களின் வேட்புமனு நிராகரிப்பிற்கு எதிராக மகிந்த அணி நிச்சயம் போர்க்கொடி உயர்த்தும். அப்பொழுது மீண்டும் கிளம்பும் சர்ச்சையிலாவது மைத்திரி ஆக காரியம் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.