அல் ஹாஜ் எம்.எச்.எ.சமத்
அஸ்லம் ஹாஜியார் முளுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்கிறார் வெறும் அண்டப்புளுகனாக ஏன் மாறினார் என்று விளங்கவில்லை மர்ஹூம் அஷ்ரப் ஒருபொழுதும் தனக்குப்பின் ரவுப் ஹக்கீம் தலைவராக வரவேண்டும் என்று சொல்லவில்லை மாறாக அவர் வேறு ஒருகருத்துடன் இருந்தார் நான் அஸ்ரபினை ஆறுவயதிலிருந்தே அறிவேன் அவரது ஆசிரியாராகவும் நண்பராகவும் அவரது ஆலோசகராவும் இறக்கும் வரை கூடவே இருந்தவன் அஸ்லம் ஹாஜியார் இப்படியான பொய்யை துணிந்து எப்படி சொல்வார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது
ஹசனலி பேரியல் ரபீக் மூவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பில் ஹசனலி ரவூப் ஹக்கீமுடன் சேர வேண்டி ஏற்பட்டது கட்சியின் தஸ்தாவேஜுகள் ஹசனலியிடம் இருந்தன அமைச்சரின் பணம் எல்லாம் ஹாபீஸ் நசீரிடம் இருந்தது மர்ஹூமின் மறைவின்பின் தங்கள் விருப்பபடி நடந்துகொண்டார்கள் இவர்கள் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் ரௌப்ஹகீம் பாயிஸ் முஸ்தபா விடம் சட்ட பயிட்சியாளராக சேர்ந்தபோது அஸ்ரபை சந்திக்க நேர்ந்தது தமிழ் ஆங்கிலம் சிங்களம் மூன்றும் தெரிந்திருந்ததால் கட்ச்சியில் இவரை சேர்த்தார். அவ்வளவுதான்