இந்தோனேசியா, மேடானில் நேற்று முன் தினம் அந்நாட்டு இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இவ்விமான விபத்தில் பலியானவர்களைத் தேடும் பணிகளை இந்தோனேசியா விரைவில் முடித்துக்கொள்ளவிருக்கிறது.
122 பேரை ஏற்றிச் சென்ற அவ்விமானம் வீடமைப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி சம்பவ இடத்தில் இருந்தவர்களும் பலியாகினர்.
“ நேற்று முதல், எங்களின் தேடல் பணியில் எவ்வித சடலங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே தேடல் மற்றும் மீட்புப் பணிகள் இன்றுடன் முடியும் என எதிர்ப்பார்க்கிறோம்” என இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்விமான விபத்தில் 141 பேர் பலியாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான போதும், உண்மையில், 135 பேர் பலியானதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
