Thursday, 2 July 2015

சாலமன் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை


சாலமன் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை









சிட்னி, 2 ஜூலை- பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில், ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவு பகுதியில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் கருவியில் 5.8-ஆகப் பதிவாகிய இந்நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிருடற்சேதமோ அல்லது பொருட்சேதமோ இதுவரை ஏற்படவில்லை. அதோடு, சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை. 
 கடந்த 2013-ஆம் ஆண்டு, சாலமன் தீவுகளில் ரிக்டர் கருவியில் 8.0 எனப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் பலர் பலியானதோடு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Loading...