வெள்ளை வான் கலாசாரம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே பொறுப்புகூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் குழுவினால் கடத்தப்பட்டிருந்த தனது நண்பர்கள் நால்வரை மஹிந்த ராஜபக்சவே காப்பாற்றி விடுவித்திருந்ததாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவே காரணம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவிலுள்ள பல்பொருட்சந்தைக்கு தொழில்வாய்ப்பிற்காக சென்ற பெசில் ராஜபக்ச, அங்கு எவ்வாறு வாகனங்களையும், வீடுகளையும் கொள்வனவு செய்ய முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்சவை விளம்பரப்படுத்திவரும் சில குழுவினர் அதனூடாக தங்களது வாக்கு வங்கிகளில் வாக்குகளையும், பைகளில் பணத்தையும் சேர்த்துவருவதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்