அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புரிமை பெற்றிருந்தாலும் தன்னை நம்பியுள்ள சிலருக்கு அதில் போட்டியிட அனுமதி வழங்கப்படாவிட்டால் தாமும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இடமளிக்க வேண்டும் என்பதே மகிந்தவின் கோரிக்கையாக இருக்கிறது.
எனினும், இவர்களில் பலர் போதைவஸ்து கடத்தல் மற்றும் இலஞ்ச ஊழலுடன் தொடர்புபட்டுள்ளதால் அவர்களிற்கு வேட்பமனு வழங்க முடியாதென மைத்திரி உறுதியாக அறிவித்ததன் பின்னணியில்த்தான் மகிந்த இந்த முடிவை எடுத்துள்ளதா தெரிகிறது.
இந்த குழப்பத்தால் நாளை நடக்க திட்டமிடப்பட்டிருந்த மகிந்தவின் முதலாவது பிரச்சார கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது