Monday, 6 July 2015

ரமழான் நோன்பை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தினால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிப்பு!


புனித ரமழான் நோன்பை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்த வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வு கடந்த சனியன்று (04.07.2015) நடைபெற்றது
கொழும்பு தெமட்ட கொடை வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ இயக்க தலைமையகத்தில் இளம் மாதர் முஸ்லிம் சங்க தேசிய தலைவி  தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. இளம் மாதர் முஸ்லிம் சங்க லாசகர் ஹாஜியானி ஹலீமா சஹாப்தீன் செயலாளர் தேசமான்ய ஹாஜியானி  மர்ளியா சித்தீக் பொருளாளர் தேசமான்ய  பவாஸா தாஹா மற்றும் சங்க உறுப்பினர்கள் பலருடன்  வை.எம்.எம்.ஏ இயக்க தலைவரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது சுமார் 250 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இளம் மாதர் முஸ்லிம்  உறுப்பினர்களால் பத்று மௌலூதும் ஓதப்பட்டது. இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தினால் வருடாந்தம் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் :-நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்




Loading...