
ரஹ்மத்துல்லாஹ் முஹம்மது தானிஸ்
குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் அம்பாறை மாவட்ட காரைதீ வு பிரதேச இளையோர் அணி அமைப்பாளராக இளைஜர் பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் முஹம்மது தானிஸ் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவாவினால் நியமிக்கப் பட்டுள்ளார்
இவர் தமிழ் முஸ்லிம் மக்கள் பின்னி பிணைந்து வாழும் காரைதீவு பிரதேசத்தை அண்மித்த மாளிகைக்காடு கிராமத்தை சேர்ந்தவராவார்.இலங்கை இளையோர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர்.நாடு தழுவிய ரீதியில் சுமார் 1.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அல் -மீசான் பௌண்டசனின் சமுகநல பிரிவில் உறுப்பினராக இருந்தும் இளையோர் நாடாளுமன்றதினுடாகவும் சமுகத்தின் பல பிரச்சினைகளுக்கு முன்னிக்கும் ஒருவராவார். எமது தேசத்தில் தொழில் சாலைகளை நிறுவி இளம் சந்ததிகளுக்கு தொழில்களையும் நாட்டுக்கு பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதை குறிகோளாக கொண்ட தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளது ஒரு புது நம்பிக்கையை தருவதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இம்முறை தமது சொந்த அடையாளங்களுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் முதன் முறையாக பொது தேர்தலில் குதிக்க உள்ளது குறிப்பிட தக்க ஒன்றாகும்.
