கிழக்கில் தேர்தலில் களமிறங்கும் கட்சி தலைமைகளின் உள் நோக்கம் இதுதான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -மக்களை குடியமர்த்துவோம் அவர்களுக்கு வாழ்வு கொடுப்போம் , நான் மறியலுக்குப் போனாலும் கவலை இல்லை

தேசிய காங்கிரஸ் - நான் தேசிய தலைவன் அல்ல, எனதூர் அதுதான் எனக்கு முக்கியம் , உங்கள் ஊர் முன்னேற வேண்டுமானால் என்னைத் தடுக்க வேண்டாம் நான் உதவுவேன்

முஸ்லிம் காங்கிரஸ் -அதிகப் படியானனோர் பாராளுமன்றம் எமது கட்சியில் இருந்து போகவேண்டும் நாம் பேரம் பேசி முக்கிய அமைச்சுப் பதவி களைப் பெறவேண்டும், தேவை ஆனால் கட்சியும் மாறுவோம்,அதிலும் எனக்கு அமைச்சுப் பதவி முக்கியம் . ஏதும் உங்களுக்கு தேவை என்றால் கொழும்புக்கு வந்து என்னை சந்திக்க காத்துக் கிடக்க வேண்டும் .

தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சி -வாய்ப்பு தாருங்கள் கிழக்கை அரச மற்றும் வெளி நாட்டு முதலீட்டு உதவியுடன் பொருளாதரத்தில் தரம் உயர்த்தி ஏற்றுமதி வலயம் ஆக்குவோம், பாரிய தொழில் சாலைகள் அமைத்து மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்

உலமாக் கட்சி - எக்கட்சி ஆட்சிக்கு வருமோ அப் பக்கம் நான் சாய்வேன் அது எனது உரிமை
தீர்ப்பு உங்கள் கையில்
கல்முனை - எ.கே.அலாவுதீன்
