Monday, 6 July 2015

கட்சியின் மூஞ்சியில் துப்பி, கட்சி ஆண்மைக்கு சவால் விட்ட அந்த செய்தி

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை தேர்ந்தெடுத்து, அங்கு முழு உபகரணங்களுடன் கூடிய அதி தீவிர சிக்கிசைப்பிரிவுக்கான கட்டடத்தொகுதி அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் சுகாதார திணைக்களத்தால் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், குறித்த அபிவிருத்தி திட்டம் வடக்கு ஆதர வைத்தியசாலைக்கு திட்டமிடப்பட்டு கைமாறப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே.

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், தயா கமகே அவர்கள், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ரூபா 25 கோடி பெறுமதியான அபிவிருத்தியை தடுத்தது தானே எனவும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சுகாதார ராஜாங்க அமைச்சராக இருந்தும், எனது திறைமையினால் இந்த செயலை செய்துள்ளேன்” எனவும் தெரிவித்திருந்தார்.  

இங்கு நாம் கவனிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

கல்முனை மாநகரம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மற்றும் அதிகார கோட்டை என அறியப்படும் பிராந்தியமாகும்.கிழக்கு மாகாணம் முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளது, கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக இருப்பவர் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த சம்மாந்துறை மன்சூர் ஆவார். மத்திய அரசிலும் சுகாதார ராஜாங்க அமைச்சராக இருப்பவர், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், கௌரவ ஹசனலி ஆவார்.
ஆக மாகாண அரசிலும், மத்திய அரசிலும் சுகாதார அமைச்சர்களாக  முஸ்லிம் காங்கிரஸ்வாதிகள் இருந்தும், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனைக்கு சுகாதார திணைக்களத்தினால் சுயாதீனமாக வழங்கப்பட்ட ஒரு அபிவிருத்தியை ஒரு சாதாரண மாகாண சபை உறுப்பினர் தயா கமகேயினால் தடுத்து வேறொரு வைத்தியாசலைக்கு இடமாற்றும் திராணியும், திறமையும் இருக்குமேயானால், இவ்வளவு அதிகாரமிருந்தும்  இவர்களால் ஏன் இதை பாதுகாக்க முடியவில்லை. மூச்சுக்கு முந்நூறு விடுத்தம் உரிமைக்கான கட்சி, உரிமைக்கான குரல் என்று உரிமை பற்றி பேசும் கட்சியினால் இந்த சாதாரண உரிமையைக்கூட பாதுகாக்க முடியாமல் போனதே பெரும் கவலையளிக்கிறது.
மட்டுமல்லாது, “முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சுகாதார ராஜாங்க அமைச்சராக இருந்தும், எனது திறைமையினால் இந்த செயலை செய்துள்ளேன்” என அழுத்திக்கூறியிருப்பதானது முஸ்லிம் காங்கிரஸின் மூஞ்சியிலே காறி உமிழ்ந்திருக்கின்றார் என்றும் கட்சியின் ஆண்மைக்கு சவால் விட்டிருக்கின்றார் என்றுமே எண்ணத்தோனுகிறது. இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், இவ்வளவு நடந்தும் ஒரு கூட்டம், சிந்திப்பதிழந்து செய்வதறியாது, குறித்த செய்தியினை துண்டுப்பிரசுரமாக வெளியிட்டு, எதிர்வரும் தேர்தலில் அப்பாவி மக்களின் வாக்கினை கொள்ளையிடவே முயற்சி செய்கின்றனர். .

எமது ஊருக்கு எமது கண் எதிரே இப்படியானதொரு துரோகம் நடந்த பிற்பாடும், செய்தவனும் நான் தான் செய்தேன் என்று சட்டையை தூக்கி பெருமிதம் கொள்ளும் போதும், இது குறித்து நாம் ஆணை வழங்கிய முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு என்ன? என்பதே தற்பொழுது உள்ள கேள்வியாகும்.
இது குறித்து தற்பொழுது வைத்தியசாலை நிர்வாகம் வெளியூர் அரசியல்வாதி ஒருவறூடாக இந்த துரோகத்திற்கு எதிராக நியாயம் கேட்டு இதுகால் வரையும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அறியமுடிகிறது. .

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான கௌரவ ஹசனலியிடம் இது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் பல தடவை முறையிட்டும், பல ஆவணக்கோவைகள் சமர்பிக்கப்பட்டும் ஏன் இது குறித்து இதுவரையும் வாய் திறக்கவில்லை? இதில் கல்முனையின் முழு ஆணையும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு என்ன?.

மேலும் இது குறித்து கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ HMM. ஹரீசுக்கும் அறியக்கிடைத்தும், ஏன் இது குறித்து இன்னும் வாய்திறக்க வில்லை? கடந்த உலமா சபையுடனான கலந்துரையாடலில் உலமாக்கள் இது குறித்து வினவிய போது தடுமாறியதும், நான் சுகாதார அமைச்சர் ஹசனலியிடம் இது குறித்து பேசுகிறேன் என்றும் கூறியவர் இது குறித்து ஏன் இன்னும் மௌனம் சாதிக்க வேண்டும்?

கட்சியின் பிரதி செயலாளரும், கல்முனை மாநகரின் முதல்வருமான கௌரவ M. நிசாம் காரியப்பரின் பங்களிப்பு என்ன?

மேலும் ஊரை தலைமைதாங்கும் கல்முனை முஹியுத்தீன் ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஏன் இது குறித்து இன்னும் கவனம் செலுத்தவில்லை? என்பதே நாம் சிந்திக்கவேண்டியதும் மனதில் எழும் கேள்விகளாக உள்ளன.

இவ்வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து பொது அமைப்புகள், பொது நிறுவனங்கள் தலையிட்டு, இது குறித்து கவனம் செலுத்துவன் மூலம் தென்கிழக்கு மக்களின் சொத்தான எமது வைத்தியசாலையை அந்நிய தீய சக்திகளிடமிருந்தும், உள்ளூர் அலிபாபா கூட்டத்திடமிருந்தும் பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே எமது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

  -    முனையூரான் முபாரிஸ்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், சுகாதார ராஜாங்க அமைச்சராக இருந்தும், “நான் தான் வைத்தியாசாலை கட்டடத்தை தடுத்தேன் என்று தயா கமகே கூறி” கட்சியின் மூஞ்சியில் துப்பி, கட்சிக்கு ஆண்மைக்கு சவால் விட்ட அந்த செய்தியை

இது தெரியாது வருகின்ற தேர்தலில் ஆதரவு திரட்ட இன்னிக்கு காலைல நோட்டீசா அடிச்சு பகிர்ந்தவன் அந்த போராளியை எங்கிருந்தாலும் மைதானத்துக்கு வருமாறு விழா கமிட்டி சார்பாக வேண்டுகிறோம்.



Loading...