Tuesday, 14 July 2015

ஜனாதிபதியின் மௌனம் கலையுமா?

UNFGGG

ele3Cartoon-2015-07-131360126683Untitled-1
எட்­டா­வது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை பொறுப்­பேற்கும் பணி இன்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வ­டை­கின்­றது. இதன் பின்னர் எத்­தனை வேட்­பு­ம­னுக்கள் தேர்தல் சட்­ட­வி­தி­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இல்லை என்ற கார­ணத்­தினால் தேர்தல் திணைக்­க­ளத்­தினால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தான அறி­விப்பும் வெளி­யா­கி­விடும்.

இதில் எந்­த­தெந்த அர­சியல் கட்­சிகள் அல்­லது சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளி­னது வேட்­பு­ம­னுக்கள் என்­ப­தையும் நாம் இன்றே அறிந்­து­கொள்­ள­மு­டியும். கொழும்பில் நடை­பெறும் இந்த நிகழ்­வு­களில் இலங்கை மக்கள் மாத்­தி­ர­மின்றி உலக நாடுகள் பல­வற்றில் உள்­ள­வர்­களும் ஆர்வம் கொண்­டுள்­ளனர்.
எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இலங்­கையில் பொதுத்­தேர்தல் நடை­பெறு­வ­தற்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட நாள் முதல் இலங்கை மாத்­தி­ர­மின்றி வெளி­நா­டுகள் பலவும் இந்த விட­யத்தில் முக்­கிய கவனம் செலுத்­தி­வ­ரு­கின்­றன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­ப­தற்­காக நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­லுக்குப் பின்னர் நல்­லாட்­சிக்­கான தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத்­தேர்தல் என்­ப­தனால் மாத்­தி­ர­மின்றி இன்­றுடன் முடி­வ­டையும் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கலும் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது.
ஊழல், மோசடி, சர்­வா­தி­காரம், வெள்ளை வேன் மூல­மான ஆட்­க­டத்தல் போன்ற விரும்­பத்­த­கா­தவை மாத்­தி­ர­மின்றி கருத்துச் சுதந்­தி­ரத்­திற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நிர்வா­கத்தில் இட­மில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதனால் சகல இன­மக்­க­ளுக்­கு­மான நல்­லாட்சி நாட்டில் மீண்­டும் மலர வேண்டும். அதற்­காக அர­சியல் கட்­சிகள் மாத்­தி­ர­மின்றி பல சிவில் அமைப்­புக்கள், புத்திஜீவிகள் உள்­ளிட்டோர் ஒன்­றி­ணைந்து தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதி­ராக கள­மி­றக்கி வெற்றிபெறச் செய்­தனர். ஆனால் இந்த வெற்­றிக்கு முக்­கிய கார­ண­மாக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­ப­தியே நல்­லாட்­சியை குழி­ தோண்டி புதைத்து விடு­வாரா என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.
தான் நாற்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியை புறந்­தள்ளி நல்­லாட்­சிக்­காக முன்­வந்­தவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. ஆனால் அவரே நல்­லாட்­சிக்கு எதி­ரான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை மீண்டும் பொதுத்­ தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யிலும் ஜன­நா­யக நடை­ மு­றையை வலுப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பொறுப்­பையும் முன்­ன­ணியின் தலைமைப் பொறுப்­பையும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் தற்­போ­தைய ஜனா­தி­பதி ஏற்­றுக் ­கொண்டார். இவரே குற்­றச்­ சாட்­டுக்கள் பல தெரி­விக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­ப­திக்கு இதே கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ மனு வழங்­கி­ விட்டார் என்று பலரும் பாரிய குற்­றத்தை சுமத்­து­கின்­றனர்.
வேட்பு மனுக்­கான இறு­தி நாள் இன்று. ஆனாலும் நேற்று வரையில் யார் எந்த மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­கின்றார்? முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த எந்த மாவட்­டத்தில் போட்­டி­யி­ரு­கின்றார்? அவ­ருக்­கான வேட்­பு மனு உறு­தி­யா­கி ­விட்­டதா என்ற விட­யங்கள் உத்­தி­யோ­க­ பூர்­வ­மாக முழு­மை­யான தகவல் அறி­யப்­ப­ட­ வில்லை.
எவ­ராலும் அழிக்க முடி­யாத தமி­ழீழ விடு­தலைப் புலிகளை அழித்­து­ விட்­ட­தான பெரு­மையைக் கொண்ட முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் கூட தற்­போ­தைய அர­சி­யலை புரிந்­து­கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. அந்த அள­வுக்கு முக்­கி­யத்­து­ மிக்­க­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விளங்­கி­வ­ரு­கி­றார். இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்­பு­ மனு வழங்­கப்­பட்ட விட­யத்தில் அவர் காத்­து­வரும் மௌனமே. உண்­மை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­னாரா?அல்­லது முன்னாள் ஜனா­தி­பதி தனக்கு ஆத­ர­வாக இருக்கும் சிலரைப் பயன்­ப­டுத்தி அச்­சு­றுத்தி வேட்பு மனுவை பெற்­றாரா?
இதனால் தான் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக இருந்த முக்­கிய அர­சியல் பிர­மு­கர்கள் நல்­லாட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கீழ்போட்­டி­யிட முன்­வந்­த­னரா? அல்­லது அர­சி­யலில் பல­ தோல்­வி­களை சந்­தித்­த­ போ­திலும் தனது அர­சியல் சாணக்­கி­யத்தை நிலை நிறுத்­தி ­வரும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவா? இவை அனைத்­துக்கும் விடை காண வேண்­டு­மாயின் ஜனா­தி­ப­தியின் மௌனம் கலை­யப்­பட வேண்டும்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான சுசில் பிரே­ம்­ஜ­யந்­தவே முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வேட்­பு­ மனு வழங்­கப்­பட்­ட­தாக அறி­வித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜனா­தி­பதி தலை­மையில் நடை­ பெற்ற வேட்­பு­ மனு தொடர்­பான கூட்­டத்­திற்குப் பின்­னரே முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வேட்­பு­ மனு வழங்­கு­வ­தற்­கான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் சுசில் பிரே­ம்­ஜ­யந்த இந்த அறி­விப்பில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
உண்­மையில் நடந்­தது என்ன?
ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பினர் தான் தற்­போ­தைய ஜனா­தி­பதி. தன்னால் அந்­தக்­ கட்சி பிள­வு­பட்­டது என்ற பெயர் தனக்கு ஏற்­ப­டக்­ கூ­டாது என்­பதில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருந்­தி­ருக்­கலாம். இத­னா­லேயே முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வேட்­பு­ மனு வழங்­கப்­ப­டு­வதில் ஜனா­தி­பதி தலை­யீடு செய்­யா­தி­ருக்­கலாம் என்ற நிலைப்­பாடும் உண்டு. அதே­ வேளை, நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தன்­னோடு ஒத்­து­ழைத்­த­வர்­க­ளுக்கு துரோகம் விளை­வித்­து­விட்டார் என்ற குற்­றச்­சாட்டு ஜனா­தி­பதி மீது சுமத்­தப்­பட்­டுள்ள மற்­றொரு குற்­றச்­சாட்­டாகும்.
முன்னாள் ஜனா­தி­ப­திக்­கான வேட்பு மனுவை வழங்­கு­வதில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான அனுர பிரி­ய­தர்­சன யாப்பா மற்றும் சுசில் பிரே­ம­்ஜ­யந்­தவும் ஒரு பக்­கச்­ சார்­பாக செயற்­ப­டு­வதால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்­றன.
தேர்தல் அறி­விப்பு இடம்­ பெற்­றுள்ள வேளையில் இவர்கள் இரு­வ­ரையும் இவர்­க­ளது கட்சிப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கினால் கட்­சியின் செயற்­பா­டு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டுமா? புதி­ய­வர்­களை நிய­மித்து தேர்தல் வேட்பு மனு தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யுமா என்­பது தொடர்­பி­லான சட்டப் பிரச்­சி­னை­க­ளிலும் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வான தரப்­பினர் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். சுசில் பிரே­ம்­ஜயந்­தவும் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்­பாவும் இந்த பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்டால் அதற்கு எதி­ராக நீதி­மன்­றத்­திற்குச் சென்றால் நீதி­மன்றம் இது தொடர்பில் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள இந்த சூழ்­நி­லையில் அது தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்தை தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­யவே மேற்­கொள்வார் என்று நீதி­மன்றம் அறி­விக்கும்.
அதற்­கான சட்ட விதி­களே இருப்­ப­தாக சட்­டத்­த­ர­ணிகள் ஆலோ­சனை வழங்­கி­ய­தா­கவும் அர­சியல் வட்­டாரத் தகவல்கள் தெரி­வித்­தன. இதனை உறுதி செய்யும் வகையில் தற்­போ­தைய ஸ்ரீலங்கா சுதந்­திரக் ட்­சியின் பொதுச் செய­லாளர் கடந்த வாரம் கருத்து தெரி­வித்தார். தான் வகிக்கும் கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­வியில் அமைச்சர் எஸ்.பி. திஸா­நா­யக்க நிய­மிக்­கப்­பட்டால் நீங்கள் உங்கள் பத­வியை அவ­ருக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என்று செய்­தி­யாளர் ஒருவர் கேட்­ட­போது, ‘‘ஆம்” என்று அனுர பிரி­ய­தர்­ஷன பதில் அளித்தார்.
திறை­ம­றைவு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற போதிலும் ஜனா­தி­பதி, முன்னாள் ஜனா­தி­ப­திக்­கான வேட்பு மனு விட­யத்தில் மௌன­மாக இருந்து வந்தார். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மௌனம் சாதித்த போதிலும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வேட்­பு­ மனு வழங்­கப்­பட்ட தகவல் வெளி­யான பின்­ன­ரும்­கூட கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி பெறப்­பட்ட வெற்­றியை திசை திருப்ப இட­ம­ளிக்கப்போவ­தில்லை என பல சந்­தர்ப்­பங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இவற்­றுக்கு மேலாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொட்­டாஞ்­சேனை சென். பெனடிக்ற் கல்­லூ­ரியின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழா நடை­பெற்­றது. இதில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை உள்­ளிட்ட பலர் கலந்துகொண்ட நிகழ்வில் ஜனா­தி­பதி உரை­யாற்­று­கையில்,
‘‘தானும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்­ச­ர­வையும் இணைந்து கல்வித்துறையில் புதிய சீர்­தி­ருத்­தங்­களை எதிர்­கா­லத்தில் மேற்­கொள்ளப்போவ­தாக வலி­யு­றுத்­தினார். அப்­ப­டி­யானால் பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே என்­பதை ஜனா­தி­பதி உறுதி செய்­துள்­ளாரா? இதன் பின்­னணி என்ன?
மக்­களின் அமோக செல்­வாக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கே உண்டு. அதனால் அவ­ருக்கு பொதுத் தேர்தல் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலையை கருத்­திற்­கொண்டே வேட்பு மனு வழங்­கப்­பட்­ட­தான நிலைப்­பாடு இருந்த நிலை­யில்தான் ஜனா­தி­பதி இவ்­வா­றான கூற்றை கூறினார் என்று சிலர் குறிப்­பி­டு­கின்­றனர்.
நல்­லாட்­சிக்­காக ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்­காக உழைத்­தவர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவும் ஒருவர் என்­பதை பலரும் அறிவர். ஆனால் ஜனா­தி­பதி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு வேட்பு மனு வழங்­கப்­பட்­டதை அவர் விரும்­ப­வில்லை. இந்த நிலை­யி­லேயே அவர் ஜனா­தி­பதி மீது ஆத்­தி­ர­ம­டைந்து லண்டன் சென்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் இதுவும் அர­சியல் சாணக்­கிய நகர்வின் ஓர் கட்டம் என சிலர் விப­ரிக்­கின்­றனர். அவர் அங்கு சென்ற சில தினங்­க­ளுக்குள் தான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கீழ் நல்­லாட்­சிக்­காக ஐக்­கிய தேசிய முன்­னணி என்ற பெயரில் போட்­டி­யிடப் போவ­தாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்­னவின் அறி­விப்பு இடம்­பெற்­ற­மையும் நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.
இவ்­வா­றான சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது மௌனத்தை முடி­வுக்கு கொண்­டு­வரும் வகையில் இன்று நாட்டு மக்­க­ளுக்கு விசேட அறி­விப்பை வெளி­யி­டலாம் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்த அறி­விப்பு இன்று இடம்­ பெ­றா­ விட்­டாலும் சில தினங்­களில் இடம்­ பெ­றலாம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கு ஆத­ர­வாக ஜனா­தி­பதி தேர்தல் பிர­சார மேடை­களில் ஏறப் போகின்­றாரா? என்­பதை நிச்­சயம் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு ஜனா­தி­பதி தள்­ளப்­பட்­டுள்ளார்.
முன்னாள் ஜனா­தி­பதி குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கா­கவே வேட்பு மனு தாக்கல் செய்யப்போகின்றார் என்று பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது. ஆனால் அது இன்­று தான் உறுதி செய்­யப்­படும். தனது வேட்பு மனு தொடர்பில் சந்­தே­கத்­தி­லி­ருக்கும் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தான் எந்த மாவட்­டத்தில் போட்­டி­யிடப் போவதை கடந்த வாரத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. சில வேளையில் தனக்கு பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் வேட்பு மனுக்­கான சந்­தர்ப்பம் கிடைக்­காத பட்­சத்தில் வேறு கட்­சி­யூ­டாக வேட்பு மனுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளாரா? அல்­லது இரண்டு வேட்பு மனுக்­களும் இன்று தாக்கல் செய்­யப்­பட்டால் இவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா?
இப்­ப­டி­யான நிலையில் அது தொடர்பில் முடிவை தேர்தல்கள் ஆணை­யா­ள­ரிலும் பார்க்க நீதி­மன்­றமே மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும். இப்­ப­டி­யான விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் நீதி­மன்றம் தீர்ப்­பொன்றை வழங்­கி­யுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் சட்ட விட­யங்­களில் கவனம் செலுத்­தி­யுள்ள இவரும் தேர்தல் ஆணை­யாளர் மற்றும் சட்­டத்­து­றை­யி­ன­ரு­டனும் ஆலோ­சனை நடத்­தி­யுள்ளார்.
இதற்கு மத்­தியில் லண்டன் சென்­றுள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, ஜனா­தி­ப­தியின் அறி­விப்­புக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளி­யி­ட­யி­ருப்­ப­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. இதில் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வேட்பு மனு வழங்­கப்­பட்ட விட­யத்­திற்கு முக்­கிய இட­ம­ளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் மீண்டும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிடும் வர­லாற்றுச் சம்­பவம் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் இடம்பெறவுள்ளது. சட்ட ரீதியிலான தடை இதற்கு இல்லாதிருந்த போதிலும் அவருக்கு எதிரான சக்திகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லக்கூடும். இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்­ப­டி­யி­ருந்த போதிலும் வேட்பு மனு­த்தாக்­க­லுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணை­யா­ளரின் அறி­விப்பு பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட யார், யார் தகுதி பெற்­றுள்­ளார்கள் என்­பதை வேட்பு மனு அடிப்­ப­டையில் உறுதி செய்­து­வி­டுவார்.
இதே­வேளை 29 முறை தேர்­தல்­களில் தோற்று, மீண்டும் அர­சி­யலில் பிர­கா­சிக்க ஆரம்­பித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் சாணக்­கி­யத்­தையும் இங்கு குறிப்­பி­டு­வது மிக பொருத்­த­மா­ன­தாகும்.
சிங்­கள மொழியில் இப்­ப­டி­யொரு பேச்சு வழக்கு உண்டு. அதா­வது பன்­றியின் முதுகில் வைத்து பன்றி இறைச்­சியை வெட்­டு­வது போன்றே இலங்கை அர­சி­யலில் எப்­பொ­ழுதும் வீழ்த்த முடி­யாது என்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வீழ்த்­தினார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரான தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்கி மஹிந்த ராஜ­பக் ஷவை தோற்­க­டித்­ததை பலரும் இன்று சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இதே­போன்றே தனது அர­சியல் ஸ்திரத்­தன்­மையை தொடர்ந்து முன்­னெ­டுத்து தக்கவைப்­பதில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் சாணக்கியத்தை முன்னெடுக்கத் தவறமாட்டார்.
(சூரிய கலா)
Loading...