Wednesday, 8 July 2015

மகிந்தவுடன் உறவில் இருக்கும் போது ஏன் கூறவில்லை ? NDPHR கேள்விக் கணை




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சூழ்நிலைக் கைதியாக மாறிவிட்டார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமலும், கட்சியை எதிர்க்க முடியாமலும் அவர் செயற்பட்டு வருகின்றார். 

இன்று சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சந்தேகமில்லாது அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படும். மீண்டும் எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைத்து சாத்வீக போராட்டங்களை எடுக்கவேண்டி வரும்.

மஹிந்த கூட்டணி மீண்டும் இனவாத முறுகல் நிலைமையை தோற்றுவிக்கும் முயற்சிகளை எடுக்கின்றது. இப்போதே இவர்களது இனவாத பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேபோலவே மஹிந்தவும் இனவாத கருதுக்கலையும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் கருத்துக்களையும் வெளிப்படுட்ட ஆரம்பித்துவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர நினைக்கின்றமை என்பவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வண்மையாகக் கண்டிக்கின்றது.

ஜனாதிபதி தனது முடிவுகளை மக்களுக்காகவே எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்


 மகிந்தவுடன் உறவில் இருக்கும்  போது  ஏன் கூறவில்லை ? 
Loading...