Wednesday, 8 July 2015

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு வராத வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயல்படும்-- நிசாம் காரியப்பர்











பாராளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் னினும் இரு கட்சிகளும் எங்கு, எப்படி, எதன் அடிப்படையில் போட்டியிடுவார்கள் என்பது முடிவாகவில்லை என்றும், அது அடுத்த சில தினங்களில் தெரியவரும் எனவும்,

சில மாவட்டங்களில் தமது கட்சி தனியாகவும், சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு வராத வகையிலும் போட்டிடும் வாய்ப்புகளும் கட்சியால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது எனவும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரங்களைக் கைப்பற்றுவதை தடுக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா காங்கிரஸ் தேர்தல் தொடர்பான இந்த முடிவை எடுத்துள்ளது எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்



Loading...