Monday, 10 August 2015

இன்டர்போலுக்கு தண்ணி காட்டும் உலகின் 10 பயங்கர குற்றவாளிகள்
















உலகில் இண்டர்போல் பொலிசாரால் தேடப்படும் அதிமுக்கிய 10 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இண்டர்போல் பொலிசாரால் தேடப்படும் நபர்களின் பட்டியலில், எகிப்து இஸ்லாமிக் ஜிஹாத்தின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அய்மன் அல்-ஜவாஹிரி பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் அல்-கொய்தா அமைப்புடன் இணைந்திருப்பவர்.

முன்பு, பின்லேடனுக்கு துணையாக இருந்ததாக கூறப்படும் இவருக்கு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தகர்த்தல் தாக்குதலில் முக்கிய பங்குண்டு என்று கூறப்படுகிறது.

பெர்ஷியன் குற்ற பிரிவினரின் தலைவர் ஒமித் தாஹ்விளி (Omid Tahvili), கனடாவில் இருக்கிறார். இந்த குழு உலகளாவிய இயக்கங்களுடன் இணைப்பில் உள்ளது.

தீவிரவாத இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளி ஃபேலிசியன் கபுகா (Felicien Kabuga) கென்யாவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

நூறு நாட்கள் இவரது குழுவினர் செய்த தீவிரவாத செயலில் எட்டு லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாஸ்டன் குற்ற அமைப்பை சேர்ந்த ஜேம்ஸ் பல்கர் (எ) ஒய்ட்டீ, போதை கடத்தல் மற்றும் கொலை குற்ற வழக்குகளில் தேடப்படுபவர். இதுவரை 19 கொலை குற்றத்திற்கு மேல் செய்துள்ளார்.

கடந்த முப்பது வருடங்களாக பொலிசாரிடம் இருந்து தப்பித்து வரும் இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 18 மில்லியன் பவுண்ட்ஸ்.

ரஷ்ய குற்றவாளியான அலீம்ஸான் (Alimzhan Tokhtajhounov) பல குற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த காரணத்திற்காக தேடப்படுகிறார்.

உகாண்டாவை சேர்ந்த ஒரு கொரில்லா படை தலைவர் ஜோசப் கோனி, எதிர்ப்பு ராணுவத்தை நடத்தி வருகிறார். மனிதர்களுக்கு எதிராக பல நாச வேலைகளில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக கருதப்படும் செம்யோன் (Semion Mogilevich), உலகெங்கிலும் பரவியிருக்கும் ரஷ்யாவின் பெரும்பாலான மாஃபியாக்களின் தலைவன் என தெரியவருகிறது.

இந்தியாவில் இருக்கும் குற்ற பிரிவு குழுக்களின் தலைவனாக திகழும் தாவூத் இப்ராஹிம், குற்றக் காரியங்களில் ஈடுபடவே ஓர் குழுவை நடத்தி வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் போதை விற்பனை செய்து வருகிறார்.

இத்தாலியின் கோசா நோச்டிரா எனும் மாஃபியா கும்பலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேட்டியோ மெச்சினா டினாரோ (Matteo Messina Denaro) கடந்த இருபது வருடங்களாக, குற்ற செயல்களில் ஈடுபடுவதாய் தகவல்கள் தெரியவருகிறது.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தும் கூட்டத்தின் தலைவன் ஜொக்கன் குஸ்மென் (Joaquín Guzmán) மெக்ஸிகோவில் கடந்த 2003ம் ஆண்டு மிகபெபெரும் போதை பொருள் கடத்தல்காரராக இருந்தார்.
Loading...