Monday, 10 August 2015

இலங்கையில் கலவரம் மூளும் - அமெரிக்கா எச்சரிகை













இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதே தேர்தலின் பின்னரோ கலவரங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு பயணிக்கும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுப்பதாகவும் அந்த நாடு தெரிவிவித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்திலோ தேர்தல் இடம்பெற்ற பின்னரோ இவ்வாறான கலவரங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. 

பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது கலவரங்கள் வெடிக்கலாம். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டும் அந்த நாடு கேட்டுக் கொண்டுள்ளது.(நன்றி ஈழ நாதம் )


Loading...