|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பயணங்களுக்காக தரவேண்டிய பாக்கியை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது
2011ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச, தமது பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் அஜித் டயஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயன்கோனுக்;கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி 113 மில்லியன், நானூற்றி தொன்னூற்று நான்காயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு ரூபாய்களை முன்னாள் ஜனாதிபதி செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதவிர இதற்கான வரிகளையும் செலுத்தவேண்டும் என்று எயார்லைன்ஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச. திருப்பதிக்கு கடந்த டிசம்பத் 9ஆம் 10ஆம் திகதிகளில் சென்று வந்த செலவும் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்
|
Saturday, 1 August 2015
![]() |
மகிந்தவின் பயணங்களுக்கான 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை |
Loading...
