Saturday, 1 August 2015

காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் கொடிகள் பறந்ததால் பெரும் பரபரப்பு!














காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய கொடிகளை பிரிவினை வாதிகள் பறக்கவிட்ட சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் அவ்வப்போது நாட்டுக்கு எதிரான தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது.

இந்தியாவிற்கு துரோகம் செய்யும் நோக்கில், இந்திய உணவை சாப்பிடும் அவர்கள், இந்திய அரசு வழங்கும் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள், அவ்வப்போது இந்திய எல்லைக்குள்ளேயே பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள பிரபல ஜாமியா மஸ்ஜித் அருகாமையில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றபடி சிலர் தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாதத்தின் தோற்றுவாயாக விளங்கும் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை உயர்த்தி பிடித்தபடிமுழக்கமிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர். போலீசார் வருவதைப் பார்த்த பிரிவினைவாதிகள் அந்த மாடியில் இருந்து கீழே இறங்கி தப்பிச் சென்று விட்டனர்.
Loading...