வடகொரியா- தென் கொரியா இடையிலான எல்லை மோதல்களை தணிக்கும் நோக்கத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை நடத்துகின்றன.
ஆனால் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவிலும், வடகொரிய பகுதியில் வழமைக்கு மாறாக படைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை அவதானித்துள்ளதாக தென்கொரிய இராணுவம் கூறுகின்றது.
தாக்குதல் ஒன்றை நடத்தும் அளவுக்கு தேவையான படைபலத்தை வடகொரியா குவித்துவருவதன் அடையாளம் இது என்றும் தென்கொரியா கூறுகின்றது.
சனிக்கிழமை தொடங்கிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், வடகொரியா, எல்லை முன்னரங்கப் பகுதியில் அதன் பீரங்கி படை பலத்தை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
