Sunday, 16 August 2015

இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் திடீர் மாயம்!

இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனா தொடர்பை இழந்துவிட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது ATR 42-300 டர்போப்ராப் என்ற விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விமானத்தின் சிக்னலுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
டிரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அப்பகுதிக்கு மீட்புக்குழு விரைகிறது.
விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
Loading...