பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுகத்துக்கு 544பேருடன் வந்த கப்பலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒர்மோக் நகரில் உள்ள துறைமுகத்துக்கு வொண்டர்ஃபுல் ஸ்டார் என்ற இரண்டடுக்கு கப்பல் 544 பயணிகளுடன் வந்து சேர்ந்தது.
இந்நிலையில் அந்த கப்பலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கப்பலின் விஐபிகள் பகுதியில் இருந்த 6 பேரில் 5 பேர் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பினர்.
எனினும் கப்பலின் மேல்பகுதியில் மாட்டிகொண்ட பயணி ஒருவர் 30 அடி உயரத்தில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர்.
கப்பலில் இருந்த குழந்தைகள் உட்பட பயணிகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
இதில் மீட்புப்படையை சேர்ந்த 2 வீரர்களுக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Sunday, 16 August 2015
![]() |
கப்பலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: கடலில் குதித்து உயிர் பிழைத்த பயணி(வீடியோ இணைப்பு) |
Loading...
29.07.2015 - Comments Disabled
25.11.2015 - Comments Disabled
12.06.2015 - Comments Disabled
14.07.2015 - Comments Disabled
31.07.2015 - Comments Disabled