பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப் படவுள்ள அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எவ்விதமான அமைச்சுப் பதவியும் கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்ட மக்கள் கையொப்ப வேட்டை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார்கள்.முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் முக்கிய நோக்கம் தான் ஒரு அமைச்சுப் பதவியைப் பெறுவதும் அதன் சுக அனுபம்களை அடைவதும் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்வு காணும் நோக்கில்லாது சாக்குப் போக்குச் சொல்வதும் ,இவ்வாறன கடந்த கால அனுபம்களையும் எதிர்கால முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டும் இவர் மீது நம்பிக்கை இழந்த மக்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு இதை அறிவிக்கும் முகமாக மக்களிடம் கையொப்ப வேட்டை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர் . இதில் ஒரு லட்சம் பேர் கையொப்பம் எதிர் பார்க்கப் படும் என இதை ஆரம்பி க்கவுள்ள மக்கள் நலன் அமைப்பு அறிவித்துள்ளது
சம்மாந்துறை - முகமது இக்பால்

