மரமும் மயிலும் கோடிக் கணக்கான பணத்தை வீசி எறிந்து மாபெரும் தோரனம்களும் ,மாபெரும் ஊர்வலம்களும் , துண்டுப் பிரசுரங்களும் விளம்பர காட்சிகளும்,விருந்து உபசாரங்களும்,ஊடகவியலாளர் கூட்டங்களும் நடை பெறுகின்றன . இவைகளுக்கு வீசி எறியப் படும் கோடிக் கணக்கான பணம் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு வாழ்விடம் அமைத்துக் கொடுக்க போதுமானதாகும் . மேடைகளில் கூட ஒரு தலைவர் மீது மற்றத் தலைவர் கரி பூசுவதில் காலம் கடந்து விட்டது .
மக்கள் உணரவேண்டும் , நீங்கள் வானவில் போன்று வந்து விழும் இத் தலைவர்களின் பணத்துக்கு கவரப் பட்டு அதற்கு அடிமையானால் உங்கள் உரிமையை இழப்பீர்கள்.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா


