தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா
வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நீண்ட காலம் தொழில் புரிவோர் தங்களது ஊதியத்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு பெரும் அளவிலான வெளி நாட்டுப் பணத்தை அனுப்பி வைப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளிக்கிறார்கள் இவ்வாறன இவர்களின் இப் பங்களிப்பு நாட்டின் அன்னியச் செலவாணியில் பெரும் வளர்ச்சியைக் கொடுக்கின்றது தற்போது இவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித பலன்களும் அளிக்கப் பட வில்லை.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இதைக் கருத்தில் கொண்டு இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவர்களுக்கு வாகன இறக்குமதி வரி விலக்கு அளிக்கும் படி அரசாங்கத்தை கோரவுள்ளது
இக் கோரிக்கைக்கு சாதகமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எமது கட்சி எதிர்பார்க்கிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா கூறினார்