Thursday, 13 August 2015

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வேட்பாளர்களை கைதுசெய்ய தடையில்லை--மஹிந்த தேசப்பிரிய


நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு நபரையும் கைது செய்யவும்ää விசாரணை செய்யவும் முடியும்.இதற்கு தேர்தல் திணைக்களம் எந்த வகையிலும் இடையூறாக இருக்காது.

தேர்தல் முடிவடையும் வரையில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் தேர்தல் திணைக்களத்தில் எடுக்கப்பட்டது.

இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் வாக்கு மூலமொன்றை அளிக்க வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையாளரின் உத்தரவிற்கு அமைய இருவரையும் அழைக்கும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Loading...