Thursday, 13 August 2015

வெற்றிலைக்கு வாக்களிப்பதற்கு மாறாக மிருகத்திற்கு வாக்களிக்கலாம்--சந்திரிக்கா


இம்முறை பொது தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் ஜனநாயக ஆட்சி காணப்படுவதாகவும் தொடர்ந்து அதனை கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி கைக்கு அல்லது வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதனால் மாறாக மிருகத்திற்கு வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...