Thursday, 6 August 2015

மஹிந்தவுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில்.

colombo
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிலாபத்தில் இன்று பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பல இன்று சிலாபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டங்களில் பங்கேற்பதற்காக, புத்தளம் மாவட்ட வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோவின் இல்லத்துக்கு மஹிந்த ராஜபக்‌ஷ சென்றபோதே பொதுமக்கள் அவருக்கு எதிராக வீதியிறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவித்தன.
இவர்கள், மஹிந்தவுக்கு எதிரான சுலோகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...