|
தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், சட்டமீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,
நீதியானதும், நியாயமுமான தேர்தலை நடத்துவதற்கு சட்ட வரம்பிற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
|
Friday, 14 August 2015
![]() |
இன்று நள்ளிரவின் பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை--பொலிஸ் |
Loading...
