Friday, 7 August 2015

முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காக ஏன் அவர்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காக ஏன் அவர்கள் அதனை முன்நிறுத்தி போராட்டங்களில் ஈடுபடவில்லை. முஸ்லிம்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதன் தலைவர்கள் எனறு கூறுகினறவர்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை .
காலம் காலமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்தக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசுக் கூட்டணியாக மாறிவிடுவதுதான் இந்த முஸ்லிம் தலைவர்களின் அரசியல் நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது

தற்போதும் சிறிலங்கா அமைச்சரவையில் முஸ்லிம்தலைவர்களும் அங்கம் வகிக்கின்றார்கள். முஸ்லிம்களின் பிரச்சனைக்கு அமைச்சரவை மூலமாக தெளிவாக தீர்வுகாண அவர்களினால் முடியும்.
ஆனால் அவர்கள் அதனையும் செய்கிறார் இல்லை. முஸ்லிம்களை ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடவும் அனுமதிக்கிறார்கள் இல்லை
இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எம். இஸ்மாலெப்பை தலைவர் 
முஸ்லிம் லிபரல் கட்சி
சுயேச்சை வேட்பாளர் குழு 8
இலக்கம் 6 சின்னம். ஒட்டகம்
Loading...