Tuesday, 25 August 2015

பிரிட்டனின் யுத்த குற்றவாளி டொனி பிளாயரை குடும்பத்தோடு விடுமுறைக்கு இலங்கைக்கு அழைப்பு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டொனி பிளாயர் தனது குடும்பம் சகிதம் இலங்கைக்கு விடுமுறை சுற்றுலா வந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் குறிப்பாக முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல் யுத்தக் குற்றவாளி டொனி
பிளாயரை இலங்கைக்குள் வர அழைத்துள்ளமை அதிர்ச்சியூட்டுவதாக மட்டுமன்றி அவமமானத்துக்கு உரியதாகவும் வெற்கக் கேடானதானவும் உள்ளது.
இது சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவீனத்தின் விளைவா அல்லது இங்கும் மற்றும் உலக நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு போக்கா என்பதுதான் இப்பேது எழுந்துள்ள கேள்வி.
அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா தலைமையிலான சர்வதேச யுத்த வெறியர்களுடன் இணைந்து பணியாற்ற துணிந்துள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது. சியோனிஸ நிகழ்ச்சி நிரலை அமுல் செய்து மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியைக் குலைத்து இலட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அந்தப் பிரதேசத்தில இரத்த ஆறு ஓட காரணமாக இருந்த இந்த சக்திகளுடன் கைகோர்க்க மங்கள சமரவீர துணிந்துள்ளார்.
அமைச்சர் சமரவீரவும் அவரது ஐ.தே.க தலைமையும் அமெரிக்காபிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யுத்த வெறியர்கள் மீது விஷேட காதல் கொண்டுள்ளமையை இங்குள்ள மக்கள் அறிய மாட்டார்கள். பிரிட்டிஷ் மக்களால் கூட வெறுக்கப்படும் ஒரு யுத்த குற்றவாளியை விருந்தாளியாக அழைத்திருப்பது அதிலும் குறிப்பாக ஒரு தேர்தல் இடம்பெறவுள்ள வேளையில் அழைத்திருப்பது ஏன் என்பதைத்தான் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க தீர்மானித்திருந்த வேளையில் இவ்வாறான ஒரு நபரை அழைத்திருப்பதானதுதேர்தல் முடிந்த பின் முஸ்லிம்களின் உணர்வுகள் எந்தளவு மதிக்கப்படும் என்பதற்கு ஒரு சான்றாகும்.
இந்த அழைப்பு அனுப்பப்பட்ட விடயத்தை பிரதான ஊடகங்கள் மூடி மறைத்தாலும் கூட முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இந்த நாட்டில் இஸ்ரேல் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் முஸ்லிம்கள் இதை பெரும் பாரதூரமானதோர் விடயமாகவே நோக்குகின்றனர். உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகங்களை அழித்தொழிக்கும் உலகளாவிய தனது திட்டத்துடன் இஸ்ரேல் இந்த நாட்டிலும் முன்னைய மற்றும் தற்போதைய அரசுகளின் ஆதரவோடு காலூன்றியுள்ளது.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் யூத ஆதரவு மேலைத்தேய ஊடகங்களில் தான் தங்கியுள்ளன. இவை அமெரிக்கா தலைமையிலான யுத்த இயந்திரத்துக்கு தேவையான சர்வதேச பிரபல்யத்தை பெற்றுக்  கொடுப்பதில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகச் செயற்படுகின்றன.
ஈராக் மாபெரும் பண்டைய நாகரிகங்கள் பலவற்றை தாங்கி நிற்கும் ஒரு தேசமாகும். மொஸப்பத்தேமியாசுமர்,அக்காத்மொஸபடோமியன்பாபிலோனியாஅஸிரியா என யூப்பிரடீஸ் தைக்கிரீஸ் நதிகளுக்கு இடையில் 7000ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாகரிகங்கள் தோற்றம் பெற்ற பூமியே ஈராக்காகும்.
ஆனால் இன்று நாம் காணும் ஈராக் முதலாம் உலக மகா யுத்தத்தின் பின் மேலைத்தேச காலணித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்டதாகும்.
1960களில் ஈராக் ஜனாதிபதி ஹஸன் அல் பக்ர் மேலைத்தேய நாடுகளால் சுரண்டப்பட்டு வந்த தனது நாட்டின் எண்ணெய் வளத்தை தேசிய மயப்படுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பக்ர்ரை கொலை செய்வதற்கு அமரிக்க தேர்ந்தெடுத்த கை;ககூலி தான் சதாம் ஹ{ஸைன். அதன் பின் சதாமை அந்த நாட்டின் சர்வாதிகார ஜனாதிபதியாக்கியது அமெரிக்கா. எண்ணெய் வளத்துடன் ஈராக் பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாகியது. அந்த நாட்டு மக்கள் மிகச் சிறந்த வசதிகளை அனுபவித்தனர்.
1980 களின் முற்பகுதியில் அமெரிக்காபிரிட்டன்ஏனைய ஐரோப்பிய நாடுகள்இஸ்ரேல்சவூதி அரேபியாமற்றும் ஏனைய அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ய சதாம் ஹ{ஸைனை பயன்படுத்தின. ஈரானின் புதிய புரட்சித் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி வளைகுடா நாடுகளுக்கு இஸ்லாத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்ட காலம் அது.
இதன் விளைவு எட்டு வருட கால ஈரான் ஈராக் யுத்தம். இரு நாடுகளையும் நாசமாக்கியது. இஸ்ரேலின் நன்மைக்காகவும்அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் விற்பனைக்காக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
ஈராக் இந்த யுத்தத்தில் வெற்றிவாகை சூடியது. ஆனால் ஈராக்கின் கடுமையான போர்க் குணம் கொண்ட அந்த பொறிமுறையை தகர்த்து நாசமாக்க காத்திருந்த சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் அந்த வெற்றி எச்சரிக்கையாக அமைந்தது. எனவே இந்த யுத்த பொறிமுறையை வேறோடு அழித்தொழிக்கும் பொறுப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு சத்தாம் ஹ{சைனுக்கு மிகத் தந்திரமாக வெறியேற்றி குவைத் மீது படையெடுக்க வைப்பதில் அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (தந்தை) வெற்றியீட்டினார். பின்னர் குவைத்தை மீட்கும் போர்வையில் ஈராக் மீது வரலாற்றில் என்றும் இல்லாதவாறு குண்டுத் தாக்குதலை புஷ் மேற்கொண்டார். அதன் மூலம் அவர் ஈராக்கை அதன் வரலாற்றுக்கு முந்திய காலத்தை நோக்கி பின்னகர்த்தினார்.
மனித உடல்களை துண்டு துண்டாக சிதறடிக்கும் கொத்தணி குண்டுகளை புஷ் ஈராக்கில் பயன்படுத்தினார். நேபாம் மற்றும் வெள்ளை பொஸ்பரஸ் இரசாயனங்கள் இந்தக் குண்டுகளில் பயன்படுத்தப்பட்டு மனித உடல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது தவிர இன்னும் கோடிக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது கூட்டுப் படைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிரி இலக்குகள் மீது வீசிய குண்டுகளின் எண்ணிக்கையை விட ஈராக் மீது அமெரிக்கா வீசிய குண்டுகளின் எண்ணிக்கை அதிகமானதாகும். வளைகுடா நாடுகளின் நிதி உதவியுடன் சவூதி அரேபியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 130000 அப்பாவி ஈராக் பொது மக்கள் நாசமாக்கப்பட்டனர். மேலைத்தேய ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் செல்வம் கொட்டியது. ஏனெனில் அவர்கள் இந்த யுத்தத்துக்காக விற்பனை செய்த ஆயுதங்களின் பெறுமதி 157 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான  விமான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ஐ.நாவின் நீண்ட கால தடைகள் என்பன காரணமாக ஈராக்கில் 500000 த்துக்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் கிட்டத்தட்ட ஒரு காலணித்துவ நாடாகியது.
பிறகு மகன் ஜோர்ஜ் புஷ்ஷ{ம் தனது தந்தையைப் பின்பற்றி சியோனிஸ நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து அமுல் செய்தார். அப்போது அவரின் நெருங்கிய சகாவாக இருந்தவர் தான் டொனி பிளேயர். ஊடகங்கள் வாயிலாக பொய்யையும் புரட்டையும் விற்பனை செய்வதில் பிரதான பங்கேற்றவர். முன்னொரு போதும் இல்லாத வகையில் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் ஈராக் மீது மிக மோசமான குண்டு வீச்சு தாக்குதல்கள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட காரணமாக இருந்தவர். ஈராக்கில் அந்தக் காலப் பகுதியில் வானத்திலிருந்து மழை பொழிந்ததோ இல்லையோ தினசரி விமானக் குண்டு மழை மட்டும் பொழியத் தவறவில்லை. இதனால் ஈராக் நகரங்கள் அன்றாடம் நிலநடுக்கத்தை எதிர் நோக்கின.இதிலிருந்து தப்ப எவராலும் முடியவில்லை. சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டனர். உயிர் தப்பியவர்கள் அன்றாடம் மரண வேதனையை அனுபவித்தனர். அச்சத்தில் உறைந்து போய் வாழ வேண்டிய ஒரு நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. ஏன் நாம் இப்படி இரக்கமின்றி தாக்கப்படுகின்றோம் என்பதை அவர்களால் கடைசி வரை புரிந்து கொள்ள முடியவே இல்லை.
இந்தக் காலப்பகுதியில் ஈராக்கிய பெண்கள் அமெரிக்க படைகளால் கூட்டாக கற்பழிக்கப்படும் காட்சிகளும் வெளியாகின. பாதுகாப்பு இன்றி வீடுகளுக்குள் பதுங்கியிருந்த இந்தப் பெண்கள் தமது வீடுகளுக்குள்ளிருந்து கதறக் கதற வெளியே இழுத்து வரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு இராணுவ குழுக்களால் வெறித்தனமாக வேட்டையாடப்பட்டனர். ஈராக்கை பாதுகாக்கப் புறப்பட்டுச் சென்ற படையினர் தான் இவ்வாறு நடந்து கொண்டனர். இந்த உலகில் மிகவும் சக்தி மிக்க இராணுவத்தின் சொந்தக்காரர்கள் எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்க அதிபர் புஷ்பிரிட்டிஷ் பிரதமர் பிளாயர் ஆகியோரினால் அனுப்பப்பட்ட நாகரிகமான சீருடை அணிந்த படையினர் தான் இவ்வாறு காட்டு தர்பார் புரிந்தனர்.
மிகவும் நாகரிகமான ஒரு சமூகத்துக்குள் அமைதியாகவும்,அன்பாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த இல்லத்தரசிகள்,தாய்மார்,மகள்மார் என எவரும் இந்த அரக்கர்களின் பிடியில் இருந்து தப்ப முயவில்லை. சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கு பெண்ணின் புனிதம் தான் பிரதான காரணம் என்ற பெறுமதிமிக்க நம்பிக்கையைக் கொண்டிருந்த ஒரு சமய மற்றும் சமூக கட்டமைப்புக்குள் கட்டுக் கோப்புடன் வாழ்ந்த பெண்கள் தான் இவ்வாறு
காட்டு மிராண்டித் தனத்துக்கு பலியானர். புஷ்ஷ{ம் பிளாயரும் தமது நாடுகளில் உள்ள பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் மதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்த அநியாயத்துக்கு வழிவிட்டிருப்பார்களா?
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் எந்தவிதமான காரணங்களும் இன்றி கண்டபடி கைது செய்யப்பட்டனர். மிக மோசமான முறையில் அவமானப்படுத்தப்பட்டனர். மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். உலகமே வியந்து கண்டிக்கும் அளவுக்கு இந்த சித்திரவதைகள் அமைந்திருந்தன.
ஈராக்கை ஆக்கிரமித்த படைகள் தங்களால் கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதாகக் கூறி மிக கேவலமான சித்திரவதை முறைகளை அவர்கள் மீது பிரயோகித்தனர். நிர்வாணமாக்கல்செவிப்பறை பாதிக்கும் வகையில் அவர்களை நொக்கி கூச்சலிடல்நிர்வான உடம்பில் அதிகளவு வெப்பத்தை ஏற்றல்அதிகளவு குளிரை பாய்ச்சல்ஒளி ஒலி என்பனவற்றை அவர்கள் மீது அதிகளவில் பிரயோகித்தல்உறங்க விடாமல் தடுத்தல்,பாலியல் ரீதியான தரக்குறைவுபலவந்தமான ஓரின புணர்வுமின்சாரம் பாய்ச்சல்கிட்டத்தட்ட நீருக்குள் மூழ்கடித்தல்மூர்ச்சை அடையச் செய்தல் இப்படி எத்தனையோ விநோதமான முறைகளை அவர்கள் மீது பிரயோகித்தனர். இவை அனைத்தும் சர்வதேச உடன்பாடுகள் மனித சித்திரவதைக்கு எதிரான ஜெனீவா பிரகடனம் என்பனவற்றை அப்பட்டமாக மீறும் வகையில் அமைந்திருந்தன.
புளிட்சர் விருது பெற்ற புலனாய்வுத் துறை ஊடகவியலாளர் சீர்மொர் ஹேர்ஷ் இது தொடர்பாக திகைப்பூட்டும் புகைப்படங்களுடன் கூடிய தொடர் கட்டுரைகளை வெளியிடும் வரை இந்த விடயங்கள் மூடி மறைக்கப்பட்டன. அமெரிக்க இராணுவ பொலிஸின் கட்டுப்பாட்டில் இருந்த பக்தாத்துக்கு அருகில் அமைந்துள்ள அபகிராய்ப் சிறைச்சாலையில் தான் இந்த அசிங்கங்கள் அனைத்தும் அரங்கேற்றப்பட்டன.
மேலே விவரிக்கப்பட்ட ஏல்லா வகையான சித்திரவதை காட்சிகள் மற்றும் பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகள் என பல ஆதாரபூர்வமான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. நாய்களை விட்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மற்றும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு ஓரின வன்புணர்வு கொடூரங்களை உள்ளடக்கிய காட்சிகள் என்பனவும் வெளியாகின.
ஈராக்கின் உள்கட்டமைப்பு மட்டுமன்றி அந்த நாட்டு மக்கள் தங்களது உயிருக்கும் மேலாகப் பாதுகாத்த ஒழுக்க விழுமியங்களும் திட்டமிட்டு நாசமாக்கப்பட்டன. கல்விமான்கள,; சிந்தனையாளர்கள்மற்றும் விஞ்ஞானிகள் வீடுவீடாகத் தேடிச் சென்று கொல்லப்பட்டனர். இன்னும் பல தலைமுறைக்கு அந்த நாடு எந்தத் துறையிலும் தலைதூக்க முடியாதவாறு சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள்அணு துறை விஞ்ஞானிகள் இன்னும் பல தொழில்சார் நிபுணர்கள்வைத்தியர்கள்சட்ட மேதைகள்,என புத்திஜீவிகள் பலரின் விலாசங்களுடன் ஈராக்கினுள் பிரவேசித்த இஸ்ரேலிய் புலனாய்வு பிரிவான மொஸாட் அமெரிக்க பிரிட்டிஷ் படைகளின் உதவியோடு அவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று கொன்று குவித்ததாக சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களுள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையிலேயே கொல்லப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் மனைவிமார் முன்னிலையிலேயே கணவன்மாரின் கழுத்து கூரிய ஆயுதங்களினால் வெட்டப்பட்டுள்ளது.
புல அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களும் 5500க்கும் அதிகமான ஏனைய புத்தி ஜீவிகளும் இவ்வாறு பலியாக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க படையினரால் ஈராக்கின் நூதனசாலையில் இருந்த பெறுமதிமிக்க கலைப் பொருள்கள் திருடப்பட்டன. ஷீஆ சுன்னி குழுக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்து அவர்களிடையே மோதல்கள் தூண்டிவிடப்பட்டன. ஈராக்கிய மக்களின் பிறப்பு இறப்பு திருமண மற்றும் காணி உரிமைப் பத்திரம் என்பனவும் எரித்து சாம்பலாக்கப்பட்டு மக்கள் மத்தியில் குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டது.
tony-blair-joker
ஈராக்கின் பலூஜா நகரத்தில் நடத்தப்பட்ட பொஸ்பரஸ் கொத்தணி குண்டுத் தாக்குதல்கள் வியட்நாமில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மோசமானவை. பத்து நாட்களுக்குள் இந்த நகரம் இந்தப் பூமியின் நரக லோகமாக மாறியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இங்கு கண்களை மூடிக் கொண்டு காட்டு தர்பாரை அரங்கேற்றியது.
பிர்அவுன்,ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் காலத்தில் இடம்பெற்றதை விட மோசமான மனித சங்காரம் இதுவாகும் என்று துருக்கிய பாராளுமன்ற மனித உரிமை ஆணைக்குழு இந்தச் சம்பவத்தை வர்ணித்துள்ளது.
1939 செப்டம்பரில் வோர்ஸோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் 1940 மே இல் ரொட்டாடாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பனவற்றை விட பலூஜா தாக்குதல்கள் மோசமானவை.
இன்று 12 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் புஷ்ஷ{ம் பிளாயரும் இணைந்து ஈராக்கில் நிகழ்த்திய கொலைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்கள் என்று தெரியவந்துள்ளது. பெண்கள்சிறுவர்கள்,முதியவர்கள் என எவரும் இந்தக் கொடூரத்தில் இருந்து தப்பவில்லை. சுமார் ஐந்து மில்லியன்களுக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் உள்ள அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.  மேலும் நான்கு மில்லியன் ஈராக்கியர்கள் தமது சொந்த நாட்டுக்குள்ளேயே நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இன்றும் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று ஈராக்கில் இரண்டு மில்லியன் விதவைகள் உள்ளனர். ஐந்து மில்லியன் பேர் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பாதிப்பேருக்கு வீடுகள் கிடையாது. ஈராக்கிய சிறுவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் மிகச் சிறந்த மருத்துவ சேவையைக் கொண்டிருந்த ஈராக்கில் இன்று அந்தச் சேவை முற்றாக சீர்குலைந்துள்ளது. 75 வீதமான மருத்துவ துறை ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அரைவாசிக்கும் அதிகமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சீர்குலைக்கப்பட்ட மருத்துவ சேவை இன்னமும் அதன் குறைந்த பட்ச பழைய நிலையைக் கூட அடைய முடியவில்லை.
இன்றும் கூட சட்டமும் ஒழுங்கும் சீர்குலைக்கப்பட்டு பல இடங்களில் அடாவடி கும்பல்களின் அதிகாரம் காணப்படுகின்றது. ஒட்டுமொத்த சமூகமும் அச்சத்துக்கும் பீதிக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஈராக் மீதான இந்த ஆக்கிரமிப்பானது ஒரு கொள்ளைக் கூட்டத்தின் செயல்போல் உள்ளது. இது அப்பட்டமானதோர் அரச பயங்கரவாதம்.சர்வதேச சட்டங்களை முற்று முழுதாக அவமதிக்கும் ஒரு செயல். தொடர்ச்சியாக சொல்லப்பட்ட பல பொய்களின் விளைவாகவே இந்த ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டது. ஊடகங்கள் இதற்கென துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை வைத்திருக்கவே இந்த ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களின்;உயிர்கள் காவு கொல்லப்பட்டமைக்கு இந்த இராணுவ நடவடிக்கை பொறுப்பாக உள்ளது. எனவே பிளாயரும் புஷ்ஷ{ம் நியாயப்படி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்கள்” என்று நோபல் பரிசு வென்ற பிரிட்டனின் இலக்கியவாதியும் நாடக ஆசிரியருமான ஹெரோல்ட் பின்டர் தெரிவித்துள்ளார்.
இதே பிளாயர் தான் இன்று வெளிவிவகார அமைச்சரின் அழைப்பில் விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளார்.
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கான மதிப்பு மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளதையே இது காட்டுகின்றது. 
Loading...