ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியிலுள்ள ஹேரட்டில் உள்ள எரிவாயு மையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பத்து சிறுவர்களும் வேறு ஒரு நபரொருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும், அப்பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாமைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் எரிவாயு மையத்திலிருந்து எழுந்த தீப்பிழம்புகள் பெரும் உயரத்திற்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இந்த வெடிப்பு சம்பவம் தாக்குதலா அல்லது விபத்தா என்பது இன்னமும் தெளிவாகமல் உள்ளது.