கடந்த வாரம் முழுவதும் வீழ்ச்சியைச் சந்தித்துவந்த சீனப் பங்குச் சந்தைகளில் இன்று பெரும் எழுச்சி இருந்தது.
ஷாங்காய் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 5.4 சதவீதம் எழுச்சி கண்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் ஏற்பட்டிருந்த இழப்பை ஈடுகட்ட இந்த எழுச்சி போதுமானதாக இல்லை.
புதன் கிழமையன்று அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்டிருந்த எழுச்சியின் காரணமாக, ஆசியா முழுவதுமே பங்குச் சந்தைகளில் உற்சாகம் காணப்பட்டது.
அடுத்த மாதமும் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியதை அடுத்து பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்தது.
