|
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, சிலாபம் மக்கள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அருந்திக பெர்ணான்டோ கலந்துகொள்ளும் தேர்தல் பிரசார கூட்டமொன்று, புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள மஹிந்த, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் இல்லத்திற்கும் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இதன்போது மஹிந்தவுக்கு எதிராக மக்கள் கறுப்புக் கொடி ஏந்றி போராட தீர்மானித்துள்ளனர்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவிருந்த மில்ரோய் பெர்னாண்டோ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்காத காரணத்தால், பிரதேசத்தின் அபிவிருத்திகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைக் காரணம் காட்டியே மக்கள் கறுப்புக் கொடி போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
|
Thursday, 6 August 2015
![]() |
மஹிந்தவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் |
Loading...
