Thursday, 13 August 2015

மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணையை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இன்று பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கி முறி கொள்வனவு மோசடியின் போது, 20 பில்லியன் ரூபா முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக அவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
அன்றைய தினம் பிரதிவாதிகளான மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அவரது மருமகன் நீதிமன்றில் முன்னிiயாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...