Sunday, 9 August 2015

அடிச்சது கல்முனைத் தொகுதிக்கு வாசனாவ இரண்டு எம்.பி கள் ,பாவம் சிராஸ்


ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இருவர் பெயரிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஜெமில் மற்றொருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் YLS ஹமீட்.  இருவரும் நிச்சயமாக பாராளுமன்றம் செல்வார்கள்.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேறு எவருக்கும் தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கவுமில்லை என சாய்ந்தமருதில் 08/08/2015 சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திரள் திரளாக வந்திருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னியில் இரண்டும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை,புத்தளம், குருநாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொன்றுமாக,தெரிவு செய்யப்பட்ட எட்டு பாராளுமன்ற ஆசனங்களுடன் தேசியப் பட்டியல் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களையும் சேர்த்து மொத்தமாக பத்து பாராளுமன்ற ஆசனங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகப்பெரிய சக்தியாக பாராளுமன்றம் செல்லவுள்ளது. தற்போது பத்து பாராளுமன்ற ஆசனங்கள் பதினொன்றாக அதிகரித்துள்ளதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.


சிராஸும் தோல்வி அடைவார்  பாவம் சிராஸ்    









Loading...